சாதனை படைத்த இலங்கை; வெற்றி யாருக்கு? - #BANvsSL 1st TEST D4

பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டமும் நிறைவுக்கு வந்துள்ளது. பங்களாதேஷ் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் பெற்றுக்கொண்ட 513 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடிய இலங்கை அணி தனது முதலாம் இன்னிங்ஸில் 199.3 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்புக்கு 713 ஓட்டங்களைக் குவித்துள்ளது. இந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொண்டதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 700 க்கும் அதிகமான ஓட்டங்களை ஆறு தடவைகள் பெற்றுள்ள ஒரேயொரு அணியாக இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.

இலங்கைக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியா 04 தடவைகள், மேற்கிந்திய தீவுகள் 04 தடவைகள், இந்தியா 04 தடவைகள், இங்கிலாந்து 03 தடவைகள் மற்றும் பாகிஸ்தான் 02 தடவைகள் என ஏனைய அணிகள் 700 க்கும் அதிகமான ஓட்டங்களை டெஸ்ட் போட்டிகளில் பெற்றுள்ளன.713 ஓட்டங்களை தனது முதலாவது இன்னிங்ஸில் பெற்றுக்கொண்டதன் ஊடாக இலங்கை அணி பங்களாதேஷ் அணியை விட 200 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. 713 ஓட்டங்களுக்கு இலங்கை அணி தனது ஆட்டத்தை இடைநிறுத்தியதும் களத்துக்கு வந்த பங்களாதேஷ் அணி 26.5 ஓவர்களுக்கு 03 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களைப் பெற்று தடுமாறி வருகிறது. கையில் 07 விக்கெட்டுகள் மீதம் உள்ள நிலையில் இன்று வீசப்படவுள்ள ஐந்தாவதும் இறுதியான நாளின் 90 ஓவர்களுக்குள் பங்களாதேஷ் அணி இன்னும் பின்னிலையில் உள்ள 119 ஓட்டங்கள் அடங்கலாக 250 ஓட்டங்களையேனும் மதிய போசன இடைவேளைக்குள் பெற்றுக்கொள்ளுமாயின் வெற்றி பெறக்கூடும்.

அல்லாத பட்சத்தில் 07 விக்கெட்டுகளை 119 ஓட்டங்களுக்குள் இலங்கை அணி கைப்பற்றிக்கொள்ளுமானால் இன்னிங்ஸிலான வரலாற்று வெற்றியொன்றை பதிவுசெய்யக்கூடிய வாய்ப்பு இலங்கைக்குக் கிடைக்கும். இலங்கை அணி சார்பில் குஷல் மெண்டிஸ் 196, தனஞ்சய டீ சில்வா 173, ரோஷென் சில்வா 109, தினேஷ் சந்திமால் 87, நிரோஷன் திக்வெல்ல 62 என சிறப்பான துடுப்பாட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தினர்.

இலங்கை அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஆவார். 2017 இன் இறுதியில் பங்களாதேஷ் அணியில் இருந்து விலகி இலங்கை அணியுடன் இணைந்து கொண்டார். இவரது வழிநடத்தலில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முக்கோணத் தொடரில் வெற்றி கண்டது இலங்கை அணி. டெஸ்ட் போட்டியிலும் தனது வியூகங்களைப் பயன்படுத்தி இலங்கையை வெற்றி பெற வைப்பாரா ஹத்துருசிங்க? இன்றைய நாளின் முடிவில் தெரிய வரும். அதுவரை காத்திருங்கள்!

#சிகரம் #சிகரம்விளையாட்டு #கிரிக்கெட் #BANvSL #BANvsSL #SIGARAMSPORTS #CRICKET #SIGARAMNEWS

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து