பங்களாதேஷ் எதிர் இலங்கை - இரண்டாம் நாள் ஆட்ட விவரம் - #BANvsSL 1st TEST D2

பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இரண்டு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என நிரூபிக்க முயன்று கொண்டிருக்கின்றன. முதலாம் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர்களை சந்தித்து 4 விக்கெட் இழப்புக்கு 374 ஓட்டங்களை பெற்றிருந்தது பங்களாதேஷ் அணி. இன்றைய இரண்டாம் நாளில் மேலதிகமாக 39.5 ஓவர்களை சந்தித்து 139 ஓட்டங்களை மட்டும் பெற்றது. 

மொத்தமாக 129.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 513 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆட்ட முடிவில் மொமினுல் ஹக் 176 ஓட்டங்களையும் (214 பந்து, 16 x 4, 1 x 6) முஷ்பிகுர் ரஹீம் 92 ஓட்டங்களையும் (192 பந்து, 10 x 4) மஹ்மதுல்லா 83 ஓட்டங்களையும் (134 பந்து, 7 x 4, 2 x 6) அதிக பட்சமாக பெற்றுக் கொண்டனர். மேலும் தமீம் இக்பால் 52, இம்ருல் கைஸ் 40 என அணிக்கு வலு சேர்த்தனர். இலங்கை அணி சார்பாக லக்ஷான் சந்தகன் அதிக பட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி இரண்டாம் நாள் முடிவில் 48 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 3.9 என்னும் ஓட்ட விகிதத்தில் 187 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது இலங்கை அணி 326 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. திமுத் கருணாரத்ன 9 பந்துகளை சந்தித்து ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழக்க குஷல் மெண்டிஸ் 83 ஓட்டங்களையும் தனஞ்செய டீ சில்வா 104 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளனர். 

போட்டியில் இன்னும் இன்னும் மூன்று நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய நாளின் முடிவில் இலங்கை அணியின் கை ஓங்குமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

#சிகரம் #சிகரம்விளையாட்டு #கிரிக்கெட் #BANvSL #BANvsSL #SIGARAMSPORTS #CRICKET #SIGARAMNEWS

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து