வாழ்தலின் பொருட்டு - 03

இதோ இருளத்துவங்கிவிட்டது வானம்... இன்னும் சற்று நேரத்தில்
நீ வந்துவிடுவாய் என் வாசலுக்கு..!

உன் வருகைக்கு காத்திருக்கும்
நானேதான் உனக்கான தேநீரையும் தயாரித்துவைத்துள்ளேன்!

உனக்குத் தெரியாது
உன் வருகைக்குப் பின் தான்
கூடடைகிறது என் வீட்டுப் பறவைகள்...

நீ வந்த பின்புதான் தீண்டலில் சுகமாக்குகிறது பெரும்பாலும் காற்று...

என் தோட்டத்து மலர்களைப் பற்றி
சற்றுக் கவலைதான்
ஆனாலும் என்ன செய்ய
அவைகள் உதிர்வதென்பது நியதிதான்.

நீ இல்லாத நாட்களிலும் கூட
அவை உதிர்ந்து
கொண்டுதானிருக்கிறது.
எனவே அதைக்குறித்த கவலை நீக்கு ...

என் காத்திருப்பின் ரணம் ஆற்ற
உன் விரல்களால் கோலமிடு ...
என்னோடு ஒளியாய்
விழிநுழையும் என் ஆருயிரே அருகமர்ந்து தோள் சாய்த்துக்கொள்..

இருவருமாய் இவ்விரவை
கொண்டாடித் தீர்ப்போம்....!

வந்துவிடு விரைந்து என்நிலவே !என்ன செய்யலாம்?
கவனச்சிதறலை தோற்கடித்து கருகாமல் ஒரு தோசை வார்த்துவிடலாம்,

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கும் துணிகளை எடுத்து மடித்து அடுக்கி வைக்கலாம்!

மிஞ்சிப் போனால் ஒரு தேநீரை மிகச் சரியான இனிப்போடு தயாரித்துப் பருகலாம்!

திறந்து வைத்த புத்தகத்தின் ஒற்றைப் பக்கத்தை பத்துமுறை வாசித்தும் ஒருவரிகூட நினைவில் நில்லாத இந்நிலையை எப்படி சமன்படுத்துவது?

பாதணி அணியமறந்து தோட்டத்தில் உலவும் மறத்துப் போன மனநிலைக்கு மருத்துவம் ஏது?

புழுதிமண் படிய புரண்டளும் உள்ளக்குழந்தையை ஒற்றைத் தேநீர் கோப்பைக்குள் அடக்கி வைத்திருக்கும் இக்கணம் அசையாது போகட்டும்

நாற்திசையும் வீசிவரும் பூங்காற்றே வெந்நீர் கலந்து குளித்து முடித்தபின் தலைதுவட்டி ஒற்றியெடு

உனக்காக மேகத்தின் இருள்விளக்கி அமுதநீர் கொண்டு அதிஅழுத்தமாய் ஒரு கோப்பை தேநீர் விருந்துதருகிறேன்

என்னை மட்டுமே சுற்றிக் கொண்டிரு சுழியன் போல் சுதந்திரக் காற்றே!-முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)

#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE 

 

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து