உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்புக்கான விடுமுறை அறிவிப்பு!

இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி (2018.02.10) சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு மணித்தியாலம் மற்றும் அதிக பட்சமாக வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வருவதற்கான நியாயமான கால எல்லை விடுமுறை வழங்கப்படவுள்ளது.அரச ஊழியர்களுக்கு இந்த விடுமுறை அரச விடுமுறைகள் தாபனக் கோவையின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் ஊழியர்களுக்கு தேர்தல்கள் விடுமுறைக்காக சட்ட ஏற்பாடுகள் ஏதும் இல்லையாதலால் தேர்தல்கள் ஆணையாளரின் விசேட அறிவித்தலின் கீழ் விடுமுறை வழங்குமாறு தொழில் தருநர்களிடம் கோரப்பட்டுள்ளது. அதே நேரம் விடுமுறையைப் பெற்றுக்கொள்பவர்கள் தமது நிறுவனத்தின் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆகக்குறைந்த விடுமுறையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தொழில் புரிவோரிடம் கோரப்பட்டுள்ள்ளது.

தேர்தல்கள் விடுமுறையானது பின்வரும் அடிப்படையில் வழங்கப்படுதல் வேண்டும். கடமை நிலையத்தில் இருந்து வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ள தூர அளவின் அடிப்படையில் விடுமுறைக்கான கால எல்லை நிர்ணயிக்கப்படும்.

40 கி.மீ அல்லது அதற்கும் குறைவான தூரத்திற்கு அரைநாள், 40 கி.மீ க்கும் 100 கி.மீ க்கும் இடையிலான தூரத்திற்கு ஒரு நாள், 100 கி.மீ க்கும் 150 கி.மீ க்கும் இடையிலான தூரத்திற்கு 1 1/2 (ஒன்றரை நாள்) மற்றும் 150 கி.மீ க்கும் அதிகமான தூரத்திற்கு இரண்டு நாள் என்ற அடிப்படையில் விடுமுறை வழங்கக் கோரப்பட்டுள்ளது. சில வாக்காளர்களுக்கு மூன்று நாட்கள் தேவைப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுமாயின் அதனையும் கருத்திற் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

நமது வாக்கு - நமது எதிர்காலம் - தவறாது வாக்களியுங்கள்!

#சிகரம் #சிகரம்செய்திகள் #உள்ளூராட்சிதேர்தல்2018 #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #LGELECTION2018

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து