பங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாம் நாள் ஆட்ட விவரம் - #BANvsSL 1st TEST D1

பங்களாதேஷ், சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் அண்மையில் இடம்பெற்று முடிந்தது. அதில் வெற்றி வாகை சூடிய உற்சாகத்துடன் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களம் இறங்கியுள்ளது.
 
நேற்று (ஜனவரி 31) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. சிட்டகாங் இல் இடம்பெற்று வரும் போட்டியில்  அணி முதலில் துடுப்பெடுத்தாடி 90 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 374 ஓட்டங்களைக் குவித்துள்ளது. 
 
 
 
டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே அதிரடியாக ஆடி 4.16 என்னும் ஓட்ட விகிதத்தில் விளையாடி வருகிறது பங்களாதேஷ் அணி. தமிம் இக்பால் 52 ஓட்டங்களையும் இம்ருல் கைஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். களத்தில் மொமினுல் ஹக் 175 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹீம் 92 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆடி வருகின்றனர். 
 
இன்னும் 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் பங்களாதேஷ் அணி அதிக ஓட்டங்களைக் குவிக்கும் பட்சத்தில் இலங்கை அணிக்கு அது பாதகமான சூழலை ஏற்படுத்தும். இன்றைய நாளை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
#சிகரம் #சிகரம்விளையாட்டு #கிரிக்கெட் #BANvSL #BANvsSL #SIGARAMSPORTS #CRICKET #SIGARAMNEWS

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து