வள்ளுவன் பிறந்தநாள்

வானளவு
புகழ் படைத்த
வள்ளுவனின்
வரலாறோ
ஒருவருக்கும்
தெரிய வில்லை
சிறுகுறிப்பும்
கிடைக்க வில்லை !

இருந்தாலும்
சான் றோர்கள்
ஏதோஓர்
தினம் குறித்து
இதுதானே
அவர் பிறந்த
நாளென்று
எழுதி வைத்தார் !இந்நாளோ
அந் நாளோ
எதுவென்று
அறியாதோர்
பொங்கலன்று
சொல்லி வைத்தால்
புவியென்ன
வெடித் திடுமா ?

கண்திறந்து
நமக் கெல்லாம்
கருத்துரைத்த
வள்ளு வனை
பொங்கலன்று
பிறந்தாரெனப்
புதியவிதி
எழுதி டுவோம் !

தை முதல்நாள்
வள்ளு வனைத்
தரணியெலாம்
கொண் டாட
வகைசெய்வீர்
அறிஞர் களே
வழிமொழிவேன்
நான தனை !

***

என் இனிய உறவுகளே தைப்பொங்கல் நாளே, நம் தலைவன் வள்ளுவன் பிறந்த நாளென்று அரசாணை பிறப்பிக்க நாம் அனைவரும் சேர்ந்து அரசுக்கு வேண்டுகோள் வைக்க வேண்டுமென உங்களைப் பணிவோடும் உரிமையோடும் வேண்டுகிறேன் ஆவணசெய்ய முன்வருவீர்களா என் அன்புச் சொந்தங்களே ?

நிறைவேறும் நாளெண்ணி.........

ஏக்கத்துடன் உங்கள்
மானம்பாடி புண்ணியமூர்த்தி .

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து