வாழ்தலின் பொருட்டு - 01

கொஞ்சம் அயர்ச்சியாகத்தானிருக்கிறது. எனக்கு நானே பேசிக் கொள்(ல்)வதும், தேற்றிக் கொள்(ல்)வதும். ஆனாலும் என்ன திருவிழாக்கூட்டத்தில் வழி தவறிப்போன குழந்தையின் மனம் வாய்க்கப்பட்டிருப்பதில் தனித்துப் பேசிக்கொள்ளுதல் அத்தனை கடினமில்லைதான்.

மெல்ல வந்து பாதம் தொட்டு சில்லிட வைத்த அலைகளிடத்தில் ஏதேனும் குற்றச்சாட்டை சுமத்தியிருத்தல் சாத்தியமா? ஓடிச் சென்று கால் நனைத்து பெருங்கூவல் விடுத்த ப்ரியங்களைத் தாண்டி கடலில் கலந்துவிட்ட அலையின் மீது பெருங்காதல் எனக்குண்டு.நுரைகளை பரிசளித்த அலையின் கடலில் மூழ்குதலே இறுதிநிலை என்றாலும் கரையில் தேங்கிக் கிடக்கும் எனது ப்ரியங்களை நனைத்துப் போக வரலாம் பேரலை என்றேனும்!
இவ்விரவின் பிறைநிலவின் மடியில், பூத்திருக்கும் நட்சத்திரங்களைக் கொய்துவந்துவிடலாமா என்று தோன்றுகிறது. இரு நாற்காலியும் ஒரு மேஜையும் போதும் இளைப்பாறுதலை இனிமையாக்க... இரு கோப்பைத் தேநீர் இருந்தால் இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்!

வாசித்து முடித்த பக்கங்களைக் குறித்த என் ரசனையற்ற சொற்களை செவிமடுத்தல் இன்னும் கடினமானதுதான்... போர்க்கால நடவடிக்கையாய் இரு காதுகளுக்கும் அடைத்துக் கொள்ள ஒரு அடைப்பானைத் தெரிவு செய்து கொண்டாலும் ஆட்சேபனையில்லை எனக்கு..

ஆறிப் போகும் முன் பருகிட விருப்பம் இருக்குமானால் பனிப்பொழிவைக் குறித்த கவலை மறந்து கலந்து கொள் எனது தேநீர் விருந்தில் என் வானமே ...! 

முகில் நிலா அவர்களின் தொடர் பேஸ்புக் பதிவுகளுக்கு நன்றி!#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE


Comments

  1. தனிமையில் நமக்கு நாமே பேசிக்கொண்டு, இயற்கையுடன் கைக்கோர்த்து வானில் வட்டமிடும் சுகம்.. சுகமே சுகம்!! அருமை!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து