தமிழோடு உறவாடு பெண்ணே!

தீராத காதல் சுமையானதா?
தெம்மாங்குப் பாடும் மனம் வேகுதா?
ஆறாக கண்ணீர் இங்கோடுதா?
அன்பே உன் ஞாபகம் அலை மோதுதா?

எழில்கொஞ்சும் தமிழோடு உறவாடு
எதிரியும் ஆவான் கருவாடு!
நீ பாடும் பாட்டுத் தாலாட்டும்
நீ எங்குச் சென்றாலும் சீராட்டும்!அரசர்க்கு அரியணை தந்தாள்!
அரும்பாவில் தேனூறச் செய்தாள்!
ஒரு பக்கம் கல்வி மறுபக்கம் செல்வம்
உலகத்தில் எது இல்லை இங்கே?

மன்னர்கள் ஆண்ட காலம்
மறத்தமிழர் பூண்ட வீரம்
எல்லாமும் இருந்ததே வாழ்வில்
இங்கு இல்லாமல் போகுமா சாவில்!

கவி பாடிக் களிக்கத்தான் வேண்டும்
கனியொத்த மனம் வாழத் தூண்டும்
இனியேது உன் வாழ்வில் துன்பம்!
இடர் போக்கி அருள்வாளே இன்பம்!

-பாவலர் அம்பாளடியாள் 

நன்றி |இப்பதிவு அம்பாளடியாள் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது | சிறப்பான வரிகளுக்கு நன்றிகளும் பாராட்டும் | சிகரம் 

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழை ஆண்டாள் - வைரமுத்து