கவிக்குறள் - 0005 - வெருவந்த செய்யாமை

அதிகாரம் 57   
வெருவந்த செய்யாமை

****

தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்து    
ஆங்கு ஒறுப்பது வேந்து (குறள் 561)  

****

தண்டனை என்பது ?

*****

பிறக்கையில்
யாரும் இங்கே
பிழையுடன்
பிறப்ப தில்லை
சூழ்நிலை
சேர்க்கை தானே
மனத்தினில்
பதிவ தாகும் ,நல்லதோர்
குடும்பந் தன்னில்
நன்கவர்
வளர்ந் திட்டாலும்
தீயவர்
சேர்க்கை யாலே
திசைமாறிக்
குற்றம் செய்வார் ,

மக்களால்
சூழ்ந்த நாட்டில்
குற்றங்கள்
இயல்பாய் நேரும்
குற்றங்கள்
இல்லா நாடு
குவலயம்
கண்ட தில்லை ,

கையிலே
செங்கோல் வைத்துக்
காக்கின்ற
நீதி மான்கள்
குற்றத்தின்
தன்மை ஆய்ந்துத்
தண்டனை 
தருதல் வேண்டும் ,

செய்தவன்
திருந்தும் வண்ணம்
திரும்பவும்
செய்யா வண்ணம்
தண்டனை
வழங்கச் சொல்லித்
தந்தைநூல்
எழுதி வைத்தான் !

****

தலைச்செல்லா - மீண்டும் செய்யாமல்    

ஒறுப்பது - தண்டிப்பது .

****

மானம்பாடி புண்ணியமூர்த்தி .
01.02.2018 .

சாவினைத் தடுப்பதற்குச்
சாலையில் தடைகள்போன்று
வாழ்விலும் சிலதடைகள்
வருவது நமக்கு நன்று !

***

அகம்நகும் நட்புடன்.....
வணக்கமும் வாழ்த்துகளும் !

#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
 #சிகரம்WORLD

Comments

  1. அருமை ! மிகவும் தெளிவாகவும் அழகாகவும் உள்ளது. மகிழ்ச்சி .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து