அழகே...

தெளி வானமதுவும் நிறமணியும் நேரம்..
நிறமில்லா கனவும் கலைகின்ற நேரம்...
மதகோரம் தவழும் தண்ணீரும் காற்றும்..
காதோரம் இனிக்கும் குழலோசை போலே..

நதியோர நாணலென நீயாடிய நடனம்..
அங்கத்தின் அசைவில் நான் மதிமயங்கிய நேரம்..
யாழியினிலே இசையெனவே நீபிறந்த நேரம்..
உலகெல்லாம் தூசெனவே நானெண்ணிய காலம்..

அழகே .. அழகில் நீயொரு சிலையழகே...
மலரே ... என்னுயிரில் படரும் பனிமலரே...மலரே உன்னை காணாத அந்நாள்
உடலோடு உயிரும் கரைந்திடுதே தானாய் ..

கானகம் எங்கும் நானழைந்து திரிந்தும்
கண்ணெங்கும் உன்னுருவம் நிற்கிறதே உயிராய்..

நானுந்தன் ஆத்மாவின் ஆழத்தின் உள்ளே
எனையாரும் அறியாது அழியாது அதிலிருந்து..

தாளங்கள் ராகங்கள் மௌனமாகி
அனைத்தும் நீயாய்யாகி...
இதமாக நானே.. இளநெஞ்சினுள்ளில்..
பெரும் மழையாய் நான் பொழியும் அந்நாளில் ...
நொடியெல்லாம் உள்ளே... கணமெல்லாம் உள்ளே ...
என் துடிப்பில் இருப்பை உணர்வாய்
மலரே.. அழகே..

குளிரோடு குதித்தாடும் பனித்துளியைப் போலே...
குதுகலமாயென் நெஞ்சும் களித்திட்ட நாளில்..
இதயத்தின் அறையெங்கும் நீ நிலைத்த காலம்...
என்னுயிரெல்லாம் நீயாய்யான நிறைந்திட்ட அக்காலம்...

அழகே... அழகில் நீயொரு சிலையழகே..
மலரே... என்னுயிரில் படரும் பனிமலரே...

- சதீஷ் விவேகா

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து