Posts

Showing posts from January, 2018

கவிக்குறள் - 0005 - வெருவந்த செய்யாமை

Image
அதிகாரம் 57   
வெருவந்த செய்யாமை

****

தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்து    
ஆங்கு ஒறுப்பது வேந்து (குறள் 561)  

****

தண்டனை என்பது ?

*****

பிறக்கையில்
யாரும் இங்கே
பிழையுடன்
பிறப்ப தில்லை
சூழ்நிலை
சேர்க்கை தானே
மனத்தினில்
பதிவ தாகும் ,நல்லதோர்
குடும்பந் தன்னில்
நன்கவர்
வளர்ந் திட்டாலும்
தீயவர்
சேர்க்கை யாலே
திசைமாறிக்
குற்றம் செய்வார் ,

மக்களால்
சூழ்ந்த நாட்டில்
குற்றங்கள்
இயல்பாய் நேரும்
குற்றங்கள்
இல்லா நாடு
குவலயம்
கண்ட தில்லை ,

கையிலே
செங்கோல் வைத்துக்
காக்கின்ற
நீதி மான்கள்
குற்றத்தின்
தன்மை ஆய்ந்துத்
தண்டனை 
தருதல் வேண்டும் ,

செய்தவன்
திருந்தும் வண்ணம்
திரும்பவும்
செய்யா வண்ணம்
தண்டனை
வழங்கச் சொல்லித்
தந்தைநூல்
எழுதி வைத்தான் !

****

தலைச்செல்லா - மீண்டும் செய்யாமல்    

ஒறுப்பது - தண்டிப்பது .

****

மானம்பாடி புண்ணியமூர்த்தி .
01.02.2018 .

சாவினைத் தடுப்பதற்குச்
சாலையில் தடைகள்போன்று
வாழ்விலும் சிலதடைகள்
வருவது நமக்கு நன்று !

***

அகம்நகும் நட்புடன்.....
வணக்கமும் வாழ்த்துகளும் !

#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்WORLD

பங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாம் நாள் ஆட்ட விவரம் - #BANvsSL 1st TEST D1

Image
பங்களாதேஷ், சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் அண்மையில் இடம்பெற்று முடிந்தது. அதில் வெற்றி வாகை சூடிய உற்சாகத்துடன் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களம் இறங்கியுள்ளது. நேற்று (ஜனவரி 31) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. சிட்டகாங் இல் இடம்பெற்று வரும் போட்டியில்  அணி முதலில் துடுப்பெடுத்தாடி 90 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 374 ஓட்டங்களைக் குவித்துள்ளது.  டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே அதிரடியாக ஆடி 4.16 என்னும் ஓட்ட விகிதத்தில் விளையாடி வருகிறது பங்களாதேஷ் அணி. தமிம் இக்பால் 52 ஓட்டங்களையும் இம்ருல் கைஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். களத்தில் மொமினுல் ஹக் 175 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹீம் 92 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆடி வருகின்றனர்.  இன்னும் 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் பங்களாதேஷ் அணி அதிக ஓட்டங்களைக் குவிக்கும் பட்சத்தில் இலங்கை அணிக்கு அது பாதகமான சூழலை ஏற்படுத்தும். இன்றைய நாளை பொறுத்திருந்து பார்ப்போம். #சிகரம் …

வாழ்தலின் பொருட்டு - 02

Image
இத்தனை வயதிற்குப் பின்பும் சொற்களைக் குறித்த அச்சமின்மையென்பது வெட்கத்திற்குரியதே! எரிந்த சொல்லமிலத்தின் வெப்பச்சூட்டை சகித்துக் கொண்டு பேரன்பின் ப்ரியங்களை அள்ளித்தர புத்தனுக்கும் இயலாதுதான்!

எத்தனை முறைதான் உடன்கட்டை ஏற்றுவேன்.! இமையினும் மேலாய்க் காக்கும் இதயத்தின் உணர்வு நரம்புகளை உருவிக் கொண்டபின் மீட்டிய இசையில் இன்பமில்லை என்னும் என் அதிமேதாவித்தனத்துக்கேனும் பரிசளிக்கப்பட்டிருக்கலாம் இந்த தகிக்கும் கோடை!

நாசித்துவாரம் வழி வெளியேறும் காற்று மட்டும் தான் இருப்பினை இக்கணம் வரை மெய்யென பறைசாற்றுகிறது... நான் எடுத்து வீசிய க(சொ)ற்கள் என்னை நோக்கி திரும்பாது என்பதுதான் அதீத காயம் தருகிறது...!

எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு ஒரு அன்பின் தீண்டல் அவசரமாய் அவசியமாகிறது...! ஒத்திப் போடலாம் வழக்கை, ஒரு கோப்பை தேநீரை பகிர்ந்து கொள்ள வா நிகழ்காலமே!கடிகாரத்தை நிறுத்திவைத்துவிட்டால் என்ன? நகர்ந்து நகர்ந்து நாட்களை மட்டும் நீட்டிக் கொண்டே போகிறது...!

வேண்டுமானால் வா விரல்களைக் கோர்த்துக் கொண்டு புதிதாய் பூத்த மஞ்சள் நிறத்து செம்பருத்திப் பூவையும், அதன் இன்னொரு கிளையில் எப்போதாவது பூக்கும் சிவப்ப…

வாழ்தலின் பொருட்டு - 01

Image
கொஞ்சம் அயர்ச்சியாகத்தானிருக்கிறது. எனக்கு நானே பேசிக் கொள்(ல்)வதும், தேற்றிக் கொள்(ல்)வதும். ஆனாலும் என்ன திருவிழாக்கூட்டத்தில் வழி தவறிப்போன குழந்தையின் மனம் வாய்க்கப்பட்டிருப்பதில் தனித்துப் பேசிக்கொள்ளுதல் அத்தனை கடினமில்லைதான்.

மெல்ல வந்து பாதம் தொட்டு சில்லிட வைத்த அலைகளிடத்தில் ஏதேனும் குற்றச்சாட்டை சுமத்தியிருத்தல் சாத்தியமா? ஓடிச் சென்று கால் நனைத்து பெருங்கூவல் விடுத்த ப்ரியங்களைத் தாண்டி கடலில் கலந்துவிட்ட அலையின் மீது பெருங்காதல் எனக்குண்டு.நுரைகளை பரிசளித்த அலையின் கடலில் மூழ்குதலே இறுதிநிலை என்றாலும் கரையில் தேங்கிக் கிடக்கும் எனது ப்ரியங்களை நனைத்துப் போக வரலாம் பேரலை என்றேனும்! இவ்விரவின் பிறைநிலவின் மடியில், பூத்திருக்கும் நட்சத்திரங்களைக் கொய்துவந்துவிடலாமா என்று தோன்றுகிறது. இரு நாற்காலியும் ஒரு மேஜையும் போதும் இளைப்பாறுதலை இனிமையாக்க... இரு கோப்பைத் தேநீர் இருந்தால் இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்!

வாசித்து முடித்த பக்கங்களைக் குறித்த என் ரசனையற்ற சொற்களை செவிமடுத்தல் இன்னும் கடினமானதுதான்... போர்க்கால நடவடிக்கையாய் இரு காதுகளுக்கும் அடைத்துக் கொள்ள ஒரு அடைப்பானைத்…

தமிழோடு உறவாடு பெண்ணே!

Image
தீராத காதல் சுமையானதா?
தெம்மாங்குப் பாடும் மனம் வேகுதா?
ஆறாக கண்ணீர் இங்கோடுதா?
அன்பே உன் ஞாபகம் அலை மோதுதா?

எழில்கொஞ்சும் தமிழோடு உறவாடு
எதிரியும் ஆவான் கருவாடு!
நீ பாடும் பாட்டுத் தாலாட்டும்
நீ எங்குச் சென்றாலும் சீராட்டும்!அரசர்க்கு அரியணை தந்தாள்!
அரும்பாவில் தேனூறச் செய்தாள்!
ஒரு பக்கம் கல்வி மறுபக்கம் செல்வம்
உலகத்தில் எது இல்லை இங்கே?

மன்னர்கள் ஆண்ட காலம்
மறத்தமிழர் பூண்ட வீரம்
எல்லாமும் இருந்ததே வாழ்வில்
இங்கு இல்லாமல் போகுமா சாவில்!

கவி பாடிக் களிக்கத்தான் வேண்டும்
கனியொத்த மனம் வாழத் தூண்டும்
இனியேது உன் வாழ்வில் துன்பம்!
இடர் போக்கி அருள்வாளே இன்பம்!

-பாவலர் அம்பாளடியாள் 

நன்றி |இப்பதிவுஅம்பாளடியாள் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது | சிறப்பான வரிகளுக்கு நன்றிகளும் பாராட்டும் | சிகரம்

உயிர் கொடுத்திடு

Image
துடிக்கு மென்
விரல்கள்
விசைப்ப லகையில்
உரைக்கு மென்
மனதினை,
ரசிக்கு முன்இ தயத்தில்
வெடிக்கும் நம் காதலை,அடக்கிடும் உள்ளங்கள்
படித்திடுமா நம்
காதலின் சந்தங்கள்!
மடிக்கு முன் இதழ்வரி
வடிக்கும் பல கவிகளை,
இடிக்கும் கவிச்
சரசங்கள் இசைக்கும்
நம் ரகசியங்கள்!

திறக்கு முன் கண்மலர்கள்
திகைக்கும் ஆண் நெஞ்சங்கள்,
குவிக்கு முன்
இதழ்களில் குறுநகை
மோகனப் புன்னகை!

எனை அணைத்தே
உயிர் கொடுத்திடு,
விழியால் எனை
ரசித்திடு-இரு
விதழால் கவி
படைத்திடு,
விழலாய் நான்
துடித்திட!
விளம்பு உன் கவிமொழி
வியக்க நான்
கவின்மொழி!

-கவின்மொழிவர்மன்

காவி முண்டாசு நாயகனே... (விவேகானந்தர்)

Image
கேள்வி ஞானத்தால்
கேட்டறிந்தேன் உன்னை..
தேடித்தேடி படித்தேன்
விருட்சமாய் விரிந்தாய் என்னுள்...

அறியாத விசயத்தை
ஆழமாய் விதைத்தாய்...
பயத்தைப் போக்கி
பலத்தை தந்தாய்...என்னுள் உறங்கிய என்னை .. 
எந்தன் மூலமே எழுப்பி
என்னை
எனக்கு உணர்த்தினாய்..

ஆத்ம பலத்தை
ஆழமாய் விதைத்தாய்..
தேசிய உணர்வை
தேகமெங்கும் ஊட்டினாய்..

பாவமில்லாத
புண்ணியன் நானென்றாய்...
உலகை மாற்றும்
உன்னத சக்தி நானென்றாய்...

அனைத்தையும் உணர்த்தி
அழியாப் புகழ் பெற்ற
காவி முண்டாசு நாயகனே...

என்றும் ஒளிர்வீர்
என்னுள் தீச்சுடராய்
மேல்நோக்கி...

- சதீஷ் விவேகா

வள்ளுவன் பிறந்தநாள்

Image
வானளவு
புகழ் படைத்த
வள்ளுவனின்
வரலாறோ
ஒருவருக்கும்
தெரிய வில்லை
சிறுகுறிப்பும்
கிடைக்க வில்லை !

இருந்தாலும்
சான் றோர்கள்
ஏதோஓர்
தினம் குறித்து
இதுதானே
அவர் பிறந்த
நாளென்று
எழுதி வைத்தார் !இந்நாளோ
அந் நாளோ
எதுவென்று
அறியாதோர்
பொங்கலன்று
சொல்லி வைத்தால்
புவியென்ன
வெடித் திடுமா ?

கண்திறந்து
நமக் கெல்லாம்
கருத்துரைத்த
வள்ளு வனை
பொங்கலன்று
பிறந்தாரெனப்
புதியவிதி
எழுதி டுவோம் !

தை முதல்நாள்
வள்ளு வனைத்
தரணியெலாம்
கொண் டாட
வகைசெய்வீர்
அறிஞர் களே
வழிமொழிவேன்
நான தனை !

***

என் இனிய உறவுகளே தைப்பொங்கல் நாளே, நம் தலைவன் வள்ளுவன் பிறந்த நாளென்று அரசாணை பிறப்பிக்க நாம் அனைவரும் சேர்ந்து அரசுக்கு வேண்டுகோள் வைக்க வேண்டுமென உங்களைப் பணிவோடும் உரிமையோடும் வேண்டுகிறேன் ஆவணசெய்ய முன்வருவீர்களா என் அன்புச் சொந்தங்களே ?

நிறைவேறும் நாளெண்ணி.........

ஏக்கத்துடன் உங்கள்
மானம்பாடி புண்ணியமூர்த்தி .

தமிழை ஆண்டாள் - வைரமுத்து

Image
பீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

மார்கழியின் அதிகாலை மனோகரமானது. தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது; தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது; இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது; கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது. தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது. “இன்னுமா உறக்கம்! எல்லே இளங்கிளியே! எழுந்து வா வெளியே” என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது. ‘மார்கழி நீராட வாரீரோ மங்கையரே’ என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது. அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு;…

அழகே...

Image
தெளி வானமதுவும் நிறமணியும் நேரம்..
நிறமில்லா கனவும் கலைகின்ற நேரம்...
மதகோரம் தவழும் தண்ணீரும் காற்றும்..
காதோரம் இனிக்கும் குழலோசை போலே..

நதியோர நாணலென நீயாடிய நடனம்..
அங்கத்தின் அசைவில் நான் மதிமயங்கிய நேரம்..
யாழியினிலே இசையெனவே நீபிறந்த நேரம்..
உலகெல்லாம் தூசெனவே நானெண்ணிய காலம்..

அழகே .. அழகில் நீயொரு சிலையழகே...
மலரே ... என்னுயிரில் படரும் பனிமலரே...மலரே உன்னை காணாத அந்நாள்
உடலோடு உயிரும் கரைந்திடுதே தானாய் ..

கானகம் எங்கும் நானழைந்து திரிந்தும்
கண்ணெங்கும் உன்னுருவம் நிற்கிறதே உயிராய்..

நானுந்தன் ஆத்மாவின் ஆழத்தின் உள்ளே
எனையாரும் அறியாது அழியாது அதிலிருந்து..

தாளங்கள் ராகங்கள் மௌனமாகி
அனைத்தும் நீயாய்யாகி...
இதமாக நானே.. இளநெஞ்சினுள்ளில்..
பெரும் மழையாய் நான் பொழியும் அந்நாளில் ...
நொடியெல்லாம் உள்ளே... கணமெல்லாம் உள்ளே ...
என் துடிப்பில் இருப்பை உணர்வாய்
மலரே.. அழகே..

குளிரோடு குதித்தாடும் பனித்துளியைப் போலே...
குதுகலமாயென் நெஞ்சும் களித்திட்ட நாளில்..
இதயத்தின் அறையெங்கும் நீ நிலைத்த காலம்...
என்னுயிரெல்லாம் நீயாய்யான நிறைந்திட்ட அக்காலம்...

அழகே... அழகில் நீயொரு சிலையழகே..
மலரே... என்னுயிரில் ப…

ஜனவரி - 2018 கிரிக்கெட் தொடர்கள்

Image
2018 பிறந்துவிட்டது. 2018 இல் பல்வேறு சிறப்பான கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறக் காத்திருக்கின்றன. ஒரு சில தொடர்கள் தற்போது ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2018 ஜனவரியில் இடம்பெறும் கிரிக்கெட் தொடர்கள் குறித்த பார்வை இதோ உங்களுக்காக: 
தொடர் : பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து  இடம்    : நியூசிலாந்து  காலம்  : ஜனவரி 03 - ஜனவரி 28
தொடர் : இந்தியா எதிர் தென்னாபிரிக்கா இடம்    : தென்னாபிரிக்கா  காலம்  :ஜனவரி 05 - பிப்ரவரி 24 தொடர் :  அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் - முத்தரப்பு தொடர்
இடம்    : ஐக்கிய அரபு இராச்சியம்  காலம்  :  ஜனவரி 11 - ஜனவரி 23
தொடர் : இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா இடம்    : அவுஸ்திரேலியா  காலம்  :ஜனவரி 12 - ஜனவரி 28 தொடர் :  இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் - முத்தரப்பு தொடர்
இடம்    : பங்களாதேஷ்  காலம்  :  ஜனவரி 15 - ஜனவரி 27
தொடர் : இலங்கை எதிர் பங்களாதேஷ் இடம்    : பங்களாதேஷ்  காலம்  :ஜனவரி 31 - பிப்ரவரி 18 சிறப்பான கிரிக்கெட் தொடர்களைக் கண்டு களியுங்கள்!