தமிழக வரலாற்றின் அவமானகரமான நாள்! - Lines Media

கொடூரமான இந்த நீண்ட இரவை எப்படி கடக்கப்போகிறேன் என்று தெரியவில்லை..
அந்த குழந்தையின் மீது பற்றி எரிந்த நெருப்பு என் மீதும் என் குழந்தைகளின் மீதும் பற்றி எரிந்ததைப்போல் மனம் எரிகிறது..தமிழக வரலாற்றில் அவமானகரமான நாள் இன்று. தீ குளித்த நால்வரில் மனைவி குழந்தைகள் மூவரும் இறந்துவிட்டார்கள்.
இப்படி ஒரு கொடூர கொலைக்கு காரணம் கந்துவட்டி கும்பலைவிட நியாயம் கிடைக்கும் என்று நம்பி வந்து ஒவ்வொரு கதவாக தட்டியவர்களை கைவிட்ட நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளும் காவல்துறையினரும்தான் முதல் குற்றவாளிகள்.
ஏற்கனவே 98 குழந்தைகளை நெருப்புக்கு தின்னக்கொடுத்துவிட்டு குற்றவாளிகளை தப்ப விட்ட இந்த ஆட்சியாளர்கள் இப்போது மட்டும் யோக்கியமாக நடந்து கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை..
ஆனால்..
போலீசோ கலெக்டர் அலுவலக அதிகாரிகளோ.. கந்து வட்டி கும்பலோ.. இரண்டு குழந்தைகளின் தகப்பனாக வயிறெரிந்து சொல்கிறேன்..
இந்த குழந்தைகளின் உடலில் பற்றிய நெருப்பு தலைமுறையாக உங்களை விடாது..
மனசும் உடம்பும் எரியுது பாவிகளே… 🙁
-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா
23-10-17
* இப்பதிவு கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களின் இணையதளமான Lines Media இணையத்தளத்தில் 23-10-2017 அன்று வெளியான பதிவு ஆகும். இச்செய்தியில் மூவர் இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்திக்குப் பின் மீதமிருந்த கணவரும் இறந்துவிட்டார். தற்போது (05-11-2017) கார்ட்டூனிஸ்ட் பாலா இப்பதிவுக்காக கைது செய்யப்பட்டுள்ளமையைக் கண்டித்து இப்பதிவு 'சிகரம்' இணையத்தினால் மீள்பதிவு செய்யப்படுகிறது.

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து