புதன் வட்டம் - பதினொன்றாம் நிகழ்வு

புதன் வட்டம் - பதினொன்றாம் நிகழ்வு

தமிழ் மனங்களுக்கு மனமார்ந்த வணக்கங்கள்!

புதன் வட்டம் 11-ஆம் நிகழ்வு 01.11.2017 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் தமிழியற்புலத்தில் உள்ள சேதுபதி அரங்கில் நடைபெற்றது எனத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்!

 
இந்நிகழ்வில் தமிழியற்புல ஒப்பிலக்கியத் துறை முனைவர்பட்ட ஆய்வாளர் க. தனலட்சுமி அவர்கள் "சங்க அகஇலக்கியத்தில் வாயில்கள்" என்கிற பொருண்மையில் கட்டுரையினைச் சமர்ப்பித்தார். ஆய்வாளர் சமர்ப்பித்த கட்டுரை சங்க இலக்கியங்கள் குறித்தும், அகப்பொருள் குறித்தும், தொல்காப்பியம் வரையறுக்கும் பன்னிரு வாயில்கள் குறித்தும் அரங்கில் ஓர் நுட்பமான உரையாடல் நிகழ்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. தொட்டனைத்தூறும் என்கிற வள்ளுவர் குறள் போல் பங்கேற்பாளர்கள் மணற்கேணி அமைத்தனர்.

இந்நிகழ்வில் தமிழியற்புல பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முதுகலை மாணவர்கள், பிறதுறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் முதாலானோர் பங்கேற்று வனப்பேற்றினர். 

இன்னும் இன்னும் இனி வரும் காலம் தமிழ்க்கடலில் அலைகளாக அறிவுப் படகுகளை அகத்திலே சுமந்து தமிழாய்வாளர் மன்றம் தம் பயணம் தொடரும் என உள மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறது.
 
நன்றி!


Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து