நமது மறதியின் வரலாறு!

தேயிலை மற்றும் கோப்பி உற்பத்தியிலிருந்து மட்டும் இலங்கைக்கு அரசுக்கு வருடத்துக்கு 2,395 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது என்கிறது ஓர் ஆய்வு. 2012-ம் ஆண்டு கணக்கின்படி 2 லட்சம் பேர் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். 1980-ம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை 5,30,000. இன்று மலையகத் தமிழர்களின் மக்கள்தொகை சுமார் 15 லட்சம். 1948-ம் ஆண்டு இலங்கை அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்தாலும், 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பிரதமர் சாஸ்திரி - இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டார நாயக்க ஒப்பந்தத்தாலும் 10 லட்சம் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களானார்கள். இந்தக் காலகட்டங்களில் இந்தியா திரும்பியவர்கள் இன்றளவும் ‘சிலோன் அகதிகள்’ என்றே அழைக்கப்படுகின்றனர்.
    


தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் சொந்தமாக நிலம் வாங்க முடியாது, கல்வி கற்க வசதி கிடையாது. அவர்களுக்கென்று அரசு எந்த ஆவணங்களும் வழங்குவதில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் கூலி மிகவும் குறைவு. நம்மூரிலேயே வேலைக்கேற்ற கூலி கேட்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை என்னவானது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இலங்கையில் எப்படி இருக்கும், யோசித்துப் பாருங்கள்!
   
இலங்கைத் தமிழர் என்றாலே நமக்குத் தெரிந்தது ஈழத் தமிழர்கள் மட்டுமே. அதே அளவுக்கு நமக்கு மலையகத் தமிழர்களின் நிலை தெரியாமல் போனதுதான் வேதனை. இவ்வளவு பெரும் திரளான மக்களை எவ்வளவு வசதியாக நாம் மறந்துவிட்டோம்? இவ்வளவுக்கும் அவர்களின் வரலாறு ஒன்றும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் ஆன ஒன்றல்ல. அவர்கள் நம்மை விட்டுச் சென்று, இந்த தமிழ் மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து சுமார் 200 ஆண்டுகள்தான் ஆகின்றன. இந்தச் சமீபத்திய வரலாறுதான் ஒரே இனமான தமிழர்களாகிய நம் எல்லோராலும் மறக்கப்பட்டுள்ளது...

இப்பதிவு பேஸ்புக்கில் 'லயத்துப் பொடியன்' அவர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட பதிவு ஆகும்! நன்றி!

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து