நான் யார் | தமிழறிஞர் மா. நன்னன்

என்னை நாத்திகன் என்கின்றனர் சிலர். நான் ஆத்திகனாக இருக்க விரும்பாமல் நாத்திகனாக இல்லை. ஆத்திகனாக இருக்க முடியாமையால்தான் நாத்திகனாக இருக்கிறேன்.

நான் கடவுள் இல்லை என்று சொல்வதாக கூறுகின்றனர். அப்படி சொல்வது சரியில்லை. கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். கடவுள் இருக்க வேண்டும். இருந்தால் நல்லது என்பவன். முடிந்தால் அப்படி ஒன்றை உண்டாக்கி இயங்க செய்யலாம் என கருதுபவன்.என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர். உண்மை அதன்று. நம்பிக்கை வைக்கத்தக்கதாக அப்படி எதுவும் இருப்பதாக புலப்பட காணோமே என ஏங்குபவன்தான் நான்.

கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும் தேடியும் அலைந்து அலுத்து களைத்து ஒய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாமென்றோ அது இருக்க கூடாதென்றோ கூறவில்லை.!

என்னை பிராமணதுவேசி பார்ப்பனர்களை திட்டுகிறவன் என்கிறீர்களே நான் அவர்களை தேவடியாள் மக்கள் புலையர் சண்டாளர் என்று திட்டுகிறேனா? இல்லையே! எங்களை மற்றவர்கள் இழிவுபடுத்தாதீர்கள் என்று தான் சொல்கிறேன். மற்றவர்களை சூத்திரர் புலையர் சண்டாளர் நீச்சர் என்னாதீர்கள் என்றுதானே கூறுகிறேன்.

என்னை மொழிவெறியன் என்கிறீர்களே நான் சமஸ்கிருதம் இந்தி ஆங்கிலம் போன்றவைகளை அழிக்கவோ சிதைக்கவோ முயல்கிறேனா? அவ்வம் மொழிக்குரியோர் அவற்றை பயன்படுத்தகூடாதென்றா சொல்கிறேன். நாங்கள் எங்கள் நாட்டில் எங்கள் அரசில் எங்கள் அலுவலகங்களில் எங்கள் மொழியை பயன்படுத்த வேண்டுமென்றுதான் கூறுகிறேன். எங்கள் மொழியில் அப்பிறமொழி கலந்தும் பிறவகையாலும் எம்மொழி செல்வாக்கை கெடுக்காதீர்கள் எம் மொழியை சிதைக்காதீர் அழிக்காதீர் என்று தானே கூறுகிறேன்.

- பெரியாரியலாளர் தமிழறிஞர் திராவிடர் இயக்க மூத்த தலைவர் முனைவர் மா. நன்னன்!

அய்யா அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!

தமிழறிஞர் மா.நன்னன் அவர்களின் மறைவை முன்னிட்டு அவரது கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டவர் : அகரம் பார்த்திபன் 

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து