மலையகத் தமிழர் வரலாறு - நூலகம்

நூலக எண் - 3951
 
ஆசிரியர் -  சாரல் நாடன்
 
நூல் வகை -  இலங்கை வரலாறு
 
மொழி - தமிழ்
 
வெளியீட்டாளர் -  சாரல் வெளியீட்டகம்
 
வெளியீட்டாண்டு -  2003
 
பக்கங்கள் - 226 
ஆசிரியர் பற்றி :
 
சாமிமலை சிங்காரவத்தையில் சிவகங்கையைச் சேர்ந்த வீரம்மா மதுரை மேலுரைச்சேர்ந்த கருப்பையாகணக்குப் பிள்ளை தம்பதியினருக்கு 9 -5-1944 ல் மகனாகப் பிறந்த நல்லையா, சாரல் நாடன் என்ற பெயரிலேயே எழுத்துலகில் பிரபல்யம் பெற்றார். இவருடன் பிறந்த ஐவரும் சகோதரிகள். தன் ஆரம்பக் கல்வியை அப்கொட், மின்னா தோட்டப் பாடசாலையிலும் , கனிஷ்ட சிரேஷ்ட, பல்கலைக்கழகப் புகுமுகம் வரையிலான கல்வியை ஹட்டன், ஹைலேண்ட்ஸ் கல்லூரி யிலும் பயின்றார். ஒராண்டுக்காலம் கண்டி, அசோகா ஹாஸ்டலில் பணிபுரிந்துவிட்டு, சாமி மலை குயில்வத்தையில் தேயிலைத் தொழிற்சாலை அதிகாரியாகத் தொழில் பயின்று, பூண்டுலோயா டன்சினேன் , புசல்லாவை நியூபீக்கொக்,கொட்டகலை டிரேய்டன், பத்தனை கெலிவத்தை ஆகிய தோட்டங்களில் முப்பத்தைந்து ஆண்டுகள்தலைமை தேயிலைத்தொழிற் சாலை அதிகாரியாகக் கடமையாற்றி 2000ம் ஆண்டு ஒய்வுபெற்றார். பணிபுரிந்த காலத்தில் தோட்ட சேவையாளர் காங்கிரஸ் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளராக நான்கு ஆண்டுகள் கடமை புரிந்தார்.

மலையக வரலாற்றை அறிய ஆர்வமுள்ளவர்கள், ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் நூலகம் இணையத்தளத்தில் இருந்து மலையகத் தமிழர் வரலாறு நூலை பதிவிறக்கி வாசித்துப் பயன்பெறுங்கள்!

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து