கே.எஸ்.ஆர்.மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் மூன்றாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு படைப்புகளைக் கோரல்

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும் என்பார் பாவேந்தர் பாரதிதாசன். அவரது எண்ணங்களின் செயல்வடிவமாக எமது கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து பன்னாட்டு அளவில் கருத்தரங்கம் நடத்திவருகிறோம்.முதலாம் ஆண்டு “ தமிழ் ஆங்கில எழுத்தாளர் பார்வையில் இயற்கை”, இரண்டாம் ஆண்டு “ திருக்குறள் மொழி பெயர்ப்புகளும், உரைநயங்களும்” என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தியுள்ளோம். இக்கருத்தரங்கில் சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து சிறப்புப் பரிசுகளும் வழங்கிவருகிறோம். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு,12.12.2017 அன்று நடைபெறவுள்ள மூன்றாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு கட்டுரை வழங்க அன்புடன் அழைக்கிறேன்..

கருத்தரங்கத்துக்கான தலைப்பு –

தமிழ் ஆங்கில இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள் (தமிழ் = தமிழ், ஆங்கிலம் = ஆங்கிலம், தமிழ் = ஆங்கிலம்)தமிழ் இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங்களையும், ஆங்கில இலக்கியங்களுடன் ஆங்கில இலக்கியங்களையும், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களுடனும் ஒப்பீட்டு முறையில் கட்டுரைகள் அமையலாம்.

கட்டுரை வழங்குவதற்கான இறுதிநாள் 14.11.2017

மேலும் விவரங்களுக்கு.. 9894829151, 9524439008

கட்டுரை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி - gunathamizh@gmail.comComments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து