சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம் 1969 -ல் இருந்து சிகாகோ பெருநகரில் வாழும் தமிழ் மக்களுக்குத் தங்கள் பாரம்பரியம், மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பேணிக் காக்கும் ஒரு தளமாகவும், இன்றைய மற்றும் அடுத்தத் தலைமுறையினர் தங்கள் கலை, பண்பாடு, இலக்கியம், இயல், இசை, நாடகம் போன்ற அறிவுச்சார் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு அமைப்பாகவும், இங்கும் இந்தியாவிலும் தொண்டார்வம் உள்ள மக்களுடனும், சகத் தொண்டு நிறுவனங்களுடனும் சேர்ந்து உதவிக் கரம் நீட்டிச் சமூக சேவை செய்யும் ஒரு அமைப்பாகவும் செயல் பட்டு வருகிறது.ஆண்டுதோறும் பொங்கல் விழா, முத்தமிழ் விழா, குழந்தைகள் தின விழா மற்றும் விளையாட்டு தின விழா என்று பொழுதுபோக்கும், விழிப்புணர்வும் ஊட்டும் பல்வேறு, பற்சுவை நிகழ்ச்சிகளை வழங்குகிறது. நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல், நடனம், நாடகம், மேடைப் பேச்சு, கவிதை, விவாத மேடை, பட்டிமன்றம், பலகுரல் விகடம், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்று அனைவரும் ரசிக்கும் வகையில் நடத்தி வருகிறது.

Contact Us

Chicago Tamil Sangam
PO Box 9606, Naperville, IL 60567 secretary@chicagotamilsangam.org

Comments

  1. அருமை! இவர்கள் பொன்னியின் செல்வன் நாடகத்தை அரங்கேற்றியவர்கள். அருமையாக இருக்கும். YouTube இல் இருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து