தமிழ் பிக்பாஸிடம் சில கேள்விகள்...

நமது மாண்புமிகு பிக்பாஸ் போட்டியாளரான கஞ்சா கருப்புஅண்ணன் அவர்கள் பிக்பாஸை நோக்கி 'ஐயா... நாமினேசன்னா என்னங்கய்யா....?' என்று கேட்டது போல நாமும் நமது பிக்பாஸ் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம். அந்தக் கேள்விகள் இதோ....
   
01. பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாள் நடக்கும்னு தானே சொன்னீங்க? பின்ன ஏன் 98 நாள்லயே முடிச்சீங்க? 

02. ஆரவ்வின் மருத்துவ முத்தம் பற்றி நீங்கள் அறிந்த போதே இருவரையும் அழைத்து கண்டித்திருந்தால் ஓவியா தண்ணீரில் விழ வேண்டியிருந்திருக்காது அல்லவா?03. நீங்கள் வைத்த போட்டிகளில் பல பிரச்சினைகள் உருவாக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் காணப்பட்டதன் பின்னணி என்ன? 

04. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தபோதும் கூட நீங்கள் மௌனமாகவே இருந்தது ஏன்?

05. நீங்கள் 'சிலருக்கு மட்டும்' பக்கச் சார்பாக நடந்துகொண்டது ஏன்? 

06. மக்கள் அளித்த வாக்குகள் நேர்மையாக எண்ணப்பட்டனவா?

07. பிக்பாஸ் வீட்டினுள்ளே எத்தனையோ நல்ல விடயங்கள் நடந்திருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் தொகுக்காமல் மக்களை தூண்டிவிடும் விதமாக காட்சிகளைக் கோர்வை செய்து காண்பித்தது ஏன்? 

இவ்வாறாக உங்கள் மனதிலும் பல கேள்விகள் இருக்கும். அவற்றை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து