நிதஹஸ் கிண்ணம் 2018 | NIDHAHAS TROPHY 2018

2018 ஆம் ஆண்டு இலங்கை தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது. அத்துடன் இலங்கை கிரிக்கெட் சபையும் தனது 70 வது வருடப் பூர்த்தியைக் கொண்டாடவுள்ளது. இதனை கொண்டாடும் முகமாக இலங்கை கிரிக்கெட் அணி முத்தரப்பு கிரிக்கெட் தொடரொன்றில் விளையாடவுள்ளது. இத்தொடரில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் விளையாடவுள்ளன. இத்தொடருக்கு 'நிதஹஸ் கிண்ணம் 2018 | NIDHAHAS TROPHY 2018' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்தொடரானது 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பெரும்பாலும் இருபது-20 தொடராக இது அமையலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா இரண்டு தடவைகள் மோதும். புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.

இப்போட்டித் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ளது. இத்தொடர் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. உத்தியோகபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். டிசம்பர் இறுதிக்குள் போட்டி அட்டவணையை எதிர்பார்க்கலாம். இலங்கை ரசிகர்கள் அடுத்த கிரிக்கெட் விருந்துக்கு தயாராகுங்கள்!

#SLC #BCCI #BCB #ICC #SRILANKA #INDIA #BANGALADESH

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து