சயிட்டத்திற்கு பதிலாக இலாப நோக்கமற்ற புதிய நிறுவனம்

 
 
சயிட்டம் (SAITM) எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்துச் செய்து, அதனை இலாப நோக்கமற்ற புதிய நிறுவனமாக நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

மேலும், சயிட்டம் மருத்துவக் கல்லூரிக்கு பதிலாக வரவுள்ள நிறுவனம், உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து