இலங்கை எதிர் பாகிஸ்தான் 2வது இருபது-20 போட்டி - இன்னுமொரு தொடர் தோல்வியில் இருந்து தப்பிக்குமா இலங்கை?

இலங்கை எதிர் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இடம்பெற்று வருகிறது. இத்தொடரின் இருபதுக்கு 20 போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. முதலாவது இருபது-20 போட்டி நேற்று (26) இடம்பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி ஏழு விக்கெட்டுகளால் தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டி இன்று (27) இரவு இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இலங்கை அணி தொடரை இழக்க நேரிடும்.இலங்கை அணியில் எத்தகைய மாற்றங்களைச் செய்தாலும் அந்த மாற்றங்கள் சாதகமான விளைவைத் தரவில்லை. இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்கான காரணங்கள் இன்னமும் சரியாகக் கண்டறியப்படவில்லை என்றே தோன்றுகிறது. காரணங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கான தீர்வு உரிய காலத்தில் எட்டப்படாது போனால் இலங்கை கிரிக்கெட் பாரிய வீழ்ச்சிக்குள்ளாகும் அபாயமே உள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபைக்குள் நிலவும் பல்வேறு குறைபாடுகள், சரியான அணித் தேர்வின்மை , வீரர்களுக்கிடையில் ஒற்றுமையின்மை எனப் பல காரணிகள் இலங்கை அணியின் தோல்வியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவற்றுக்கு நிரந்தரத் தீர்வைக் காணாமல் இலங்கை அணியின் நிலைபேறான வளர்ச்சியை இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை நிலையாகும்.

முதலாவது இருபது-20 போட்டியில் இருந்து சுயமாக பாடத்தைக் கற்றுக்கொண்டு இப்போட்டியில் வெற்றிக்காக எத்தகைய எத்தகைய வியூகத்தை இலங்கை அணி வகுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து