நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்கிறது. அமைச்சரவை அங்கீகாரம்!

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நுவரெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய இரு பிரதேச சபைகள் காணப்படுகின்றன. நுவரெலியா பிரதேச சபையின் கீழ் 1,90,000 மக்களும் அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் 2,10,000 மக்களும் காணப்படுகின்றனர். 1987 ஆம் ஆண்டு முதலே நுவரெலியா மாவட்டத்திற்கு மேலதிக பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் என ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை பதவியிலிருந்த அரசாங்கங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இன்று (2017.10.31) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நுவரெலியா பிரதேச சபையானது நுவரெலியா, கொட்டகலை மற்றும் அக்கரப்பத்தனை என மூன்று பிரதேச சபைகளாகவும் அம்பகமுவ பிரதேச சபையானது அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் நோர்வூட் என மூன்று பிரதேச சபைகளாகவும் மாற்றியமைக்கப்படவுள்ளன. ஆகவே இரண்டாக இருந்த நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை இன்று முதல் ஆறாக அதிகரிக்கிறது. புதிய பிரதேச சபைகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முதல் செயற்படும் என எதிர்பார்க்கலாம்.

பிரதேச சபைகளை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சருமான மனோ கணேசன் அவர்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களின் ஊடாக சமர்ப்பித்திருந்தார். இதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. இது மலையக வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வாகும்.

#NUWARAELIYAPRADESIYASABHA #NEPS #NUWARAELIYA #UPCOUNTRY #ELECTION

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து