திண்டுக்கல் பாடியூர் கோட்டைமேடு - இன்னுமொரு கீழடியா?

இன்னொரு கீழடி
===================
தமிழகத்தின் இன்னொரு கீழடியாக பழந் தமிழர் நாகரீக சான்றுகளை திண்டுக்கல் பாடியூர் கோட்டைமேடு பகுதி தன்னுள் புதைத்து வைத்திருக்கலாம் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.
திண்டுக்கல்- எரியோடு சாலையில் குளத்தூரில் இருந்தும் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முள்ளிப்பாடியில் இருந்தும் உள்ளே பாடியூர் சென்றடையலாம். 30 அடி உயர மண்மேடுதான் இப்போதும் கோட்டைமேடு என அழைக்கப்படுகிறது.மிக பரந்துபட்ட அளவில் இந்த கோட்டை மேடு இருந்திருக்கிறது. அரசு பள்ளிக்கூடம் கட்டுவதற்காக இந்த மண்மேட்டின் பெரும்பகுதி அண்மையில்தான் இடிக்கப்பட்டிருக்கிறது.
மூடப்பட்ட கிணறு - மேலும் இக்கோட்டை மேடு பகுதியில் பிரமாண்ட பழங்கால கிணறு ஒன்று இருந்திருக்கிறது. இந்த மண்மேட்டை இடித்துதான் அந்த பிரமாண்ட கிணற்றையே பள்ளிக் கட்டிடத்துக்காக மூடியும் இருக்கிறார்கள்.மண்மேடுகளில் புதையுண்ட பானைகள் - மண்மேடுகளுக்குள் பழங்கால பானைகள் புதையுண்டு கிடப்பதை இப்போதும் காண முடியும். மேலும் அந்த பகுதி எங்கும் சிவப்பு நிறத்திலான பழங்கால மண்பானைகளின் சிதறல்களையும் நேரில் காண முடிகிறது.
மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள்! பாடியூர் வேடசந்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்டது. அதாவது லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரையின் கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டது.
ஆட்சியாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அக்கறையுடன் செயல்பட்டு அகழாய்வுக்குட்படுத்தினால் பாடியூர் பழந் தமிழர் நாகரிகத்தை நிறுவக் கூடிய இன்னொரு கீழடியாகவும் இருக்கக் கூடும் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

தகவல் மற்றும் படங்கள் : பெ.முரளிதீர தொண்டைமான் (பேஸ்புக்)

Comments

Popular posts from this blog

வாழ்தலின் பொருட்டு - 02

தமிழோடு உறவாடு பெண்ணே!

தமிழை ஆண்டாள் - வைரமுத்து