Posts

இலங்கை 70 வது சுதந்திர தினம் - 04.02.2018 - SRILANKA 70TH INDEPENDENCE DAY

Image
இலங்கை தனது 70 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகிள் இணையத்தளம் விசேட டூடில் வெளியிட்டு கௌவரவப்படுத்தியுள்ளது. உலகின் 118 நாடுகளில் உள்ள தூதரகங்களில் 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாட ஏற்பாடாகியுள்ளது. 


இலங்கையில் 70 வது சுதந்திர தினம் கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெறுகிறது. காவல் துறை, இராணுவம் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு பிரிவுகளின் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை சுதந்திர தின பிரதான நிகழ்வில் இடம்பிடிக்கும். 

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட 1000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் தொகுப்பை அத தெரண இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதனை இங்கு தருகிறோம். (நன்றி : அத தெரண தமிழ்). "இன, மத, பேதமற்ற சூழ்நிலையை உருவாக்குவதுடன் சமாதானம் சகவாழ்வை மக்களுக்கு உறுதி செய்வதுடன் மத நல்லிணக்கத்தையும் நம்பகத்தன்மையுடன் வாழும் சூழ்நிலை உறுதிசெய்யப்படவேண்டும் இவை அத்தியாவசியமானது என்று நாம…

சாதனை படைத்த இலங்கை; வெற்றி யாருக்கு? - #BANvsSL 1st TEST D4

Image
பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டமும் நிறைவுக்கு வந்துள்ளது. பங்களாதேஷ் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் பெற்றுக்கொண்ட 513 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடிய இலங்கை அணி தனது முதலாம் இன்னிங்ஸில் 199.3 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்புக்கு 713 ஓட்டங்களைக் குவித்துள்ளது. இந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொண்டதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 700 க்கும் அதிகமான ஓட்டங்களை ஆறு தடவைகள் பெற்றுள்ள ஒரேயொரு அணியாக இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.
இலங்கைக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியா 04 தடவைகள், மேற்கிந்திய தீவுகள் 04 தடவைகள், இந்தியா 04 தடவைகள், இங்கிலாந்து 03 தடவைகள் மற்றும் பாகிஸ்தான் 02 தடவைகள் என ஏனைய அணிகள் 700 க்கும் அதிகமான ஓட்டங்களை டெஸ்ட் போட்டிகளில் பெற்றுள்ளன.


713 ஓட்டங்களை தனது முதலாவது இன்னிங்ஸில் பெற்றுக்கொண்டதன் ஊடாக இலங்கை அணி பங்களாதேஷ் அணியை விட 200 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. 713 ஓட்டங்களுக்கு இலங்கை அணி தனது ஆட்டத்தை இடைநிறுத்தியதும் களத்துக்கு வந்த பங்களாதேஷ் அணி 26.5 ஓவர்களுக்கு 03 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களைப் பெ…

வாழ்தலின் பொருட்டு - 03

Image
இதோ இருளத்துவங்கிவிட்டது வானம்... இன்னும் சற்று நேரத்தில் நீ வந்துவிடுவாய் என் வாசலுக்கு..!
உன் வருகைக்கு காத்திருக்கும் நானேதான் உனக்கான தேநீரையும் தயாரித்துவைத்துள்ளேன்!
உனக்குத் தெரியாது உன் வருகைக்குப் பின் தான் கூடடைகிறது என் வீட்டுப் பறவைகள்...
நீ வந்த பின்புதான் தீண்டலில் சுகமாக்குகிறது பெரும்பாலும் காற்று...
என் தோட்டத்து மலர்களைப் பற்றி சற்றுக் கவலைதான் ஆனாலும் என்ன செய்ய அவைகள் உதிர்வதென்பது நியதிதான்.
நீ இல்லாத நாட்களிலும் கூட அவை உதிர்ந்து கொண்டுதானிருக்கிறது. எனவே அதைக்குறித்த கவலை நீக்கு ...
என் காத்திருப்பின் ரணம் ஆற்ற உன் விரல்களால் கோலமிடு ... என்னோடு ஒளியாய் விழிநுழையும் என் ஆருயிரே அருகமர்ந்து தோள் சாய்த்துக்கொள்..
இருவருமாய் இவ்விரவை கொண்டாடித் தீர்ப்போம்....!
வந்துவிடு விரைந்து என்நிலவே !


என்ன செய்யலாம்? கவனச்சிதறலை தோற்கடித்து கருகாமல் ஒரு தோசை வார்த்துவிடலாம்,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கும் துணிகளை எடுத்து மடித்து அடுக்கி வைக்கலாம்!
மிஞ்சிப் போனால் ஒரு தேநீரை மிகச் சரியான இனிப்போடு தயாரித்துப் பருகலாம்!
திறந்து வைத்த புத்தகத்தின் ஒற்றைப் பக்கத்தை பத்துமுறை வாசித்…

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்புக்கான விடுமுறை அறிவிப்பு!

Image
இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி (2018.02.10) சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு மணித்தியாலம் மற்றும் அதிக பட்சமாக வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வருவதற்கான நியாயமான கால எல்லை விடுமுறை வழங்கப்படவுள்ளது.


அரச ஊழியர்களுக்கு இந்த விடுமுறை அரச விடுமுறைகள் தாபனக் கோவையின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் ஊழியர்களுக்கு தேர்தல்கள் விடுமுறைக்காக சட்ட ஏற்பாடுகள் ஏதும் இல்லையாதலால் தேர்தல்கள் ஆணையாளரின் விசேட அறிவித்தலின் கீழ் விடுமுறை வழங்குமாறு தொழில் தருநர்களிடம் கோரப்பட்டுள்ளது. அதே நேரம் விடுமுறையைப் பெற்றுக்கொள்பவர்கள் தமது நிறுவனத்தின் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆகக்குறைந்த விடுமுறையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தொழில் புரிவோரிடம் கோரப்பட்டுள்ள்ளது.
தேர்தல்கள் விடுமுறையானது பின்வரும் அடிப்படையில் வழங்கப்படுதல் வேண்டும். கடமை நிலையத்தில் இருந்து வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ள தூர அளவின் அடிப்படையில் விடுமுறைக்கான கால எல்லை நிர்ணயிக்கப்படும்.
40 கி.மீ அல்லது அதற்கும் க…

பங்களாதேஷ் எதிர் இலங்கை - இரண்டாம் நாள் ஆட்ட விவரம் - #BANvsSL 1st TEST D2

Image
பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இரண்டு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என நிரூபிக்க முயன்று கொண்டிருக்கின்றன. முதலாம் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர்களை சந்தித்து 4 விக்கெட் இழப்புக்கு 374 ஓட்டங்களை பெற்றிருந்தது பங்களாதேஷ் அணி. இன்றைய இரண்டாம் நாளில் மேலதிகமாக 39.5 ஓவர்களை சந்தித்து 139 ஓட்டங்களை மட்டும் பெற்றது. 
மொத்தமாக 129.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 513 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆட்ட முடிவில் மொமினுல் ஹக் 176 ஓட்டங்களையும் (214 பந்து, 16 x 4, 1 x 6) முஷ்பிகுர் ரஹீம் 92 ஓட்டங்களையும் (192 பந்து, 10 x 4) மஹ்மதுல்லா 83 ஓட்டங்களையும் (134 பந்து, 7 x 4, 2 x 6) அதிக பட்சமாக பெற்றுக் கொண்டனர். மேலும் தமீம் இக்பால் 52, இம்ருல் கைஸ் 40 என அணிக்கு வலு சேர்த்தனர். இலங்கை அணி சார்பாக லக்ஷான் சந்தகன் அதிக பட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி இரண்டாம் நாள் முடிவில் 48 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 3.9 என்னும் ஓட்ட விகிதத…

கவிக்குறள் - 0005 - வெருவந்த செய்யாமை

Image
அதிகாரம் 57   
வெருவந்த செய்யாமை

****

தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்து    
ஆங்கு ஒறுப்பது வேந்து (குறள் 561)  

****

தண்டனை என்பது ?

*****

பிறக்கையில்
யாரும் இங்கே
பிழையுடன்
பிறப்ப தில்லை
சூழ்நிலை
சேர்க்கை தானே
மனத்தினில்
பதிவ தாகும் ,நல்லதோர்
குடும்பந் தன்னில்
நன்கவர்
வளர்ந் திட்டாலும்
தீயவர்
சேர்க்கை யாலே
திசைமாறிக்
குற்றம் செய்வார் ,

மக்களால்
சூழ்ந்த நாட்டில்
குற்றங்கள்
இயல்பாய் நேரும்
குற்றங்கள்
இல்லா நாடு
குவலயம்
கண்ட தில்லை ,

கையிலே
செங்கோல் வைத்துக்
காக்கின்ற
நீதி மான்கள்
குற்றத்தின்
தன்மை ஆய்ந்துத்
தண்டனை 
தருதல் வேண்டும் ,

செய்தவன்
திருந்தும் வண்ணம்
திரும்பவும்
செய்யா வண்ணம்
தண்டனை
வழங்கச் சொல்லித்
தந்தைநூல்
எழுதி வைத்தான் !

****

தலைச்செல்லா - மீண்டும் செய்யாமல்    

ஒறுப்பது - தண்டிப்பது .

****

மானம்பாடி புண்ணியமூர்த்தி .
01.02.2018 .

சாவினைத் தடுப்பதற்குச்
சாலையில் தடைகள்போன்று
வாழ்விலும் சிலதடைகள்
வருவது நமக்கு நன்று !

***

அகம்நகும் நட்புடன்.....
வணக்கமும் வாழ்த்துகளும் !

#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்WORLD

பங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாம் நாள் ஆட்ட விவரம் - #BANvsSL 1st TEST D1

Image
பங்களாதேஷ், சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் அண்மையில் இடம்பெற்று முடிந்தது. அதில் வெற்றி வாகை சூடிய உற்சாகத்துடன் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களம் இறங்கியுள்ளது. நேற்று (ஜனவரி 31) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. சிட்டகாங் இல் இடம்பெற்று வரும் போட்டியில்  அணி முதலில் துடுப்பெடுத்தாடி 90 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 374 ஓட்டங்களைக் குவித்துள்ளது.  டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே அதிரடியாக ஆடி 4.16 என்னும் ஓட்ட விகிதத்தில் விளையாடி வருகிறது பங்களாதேஷ் அணி. தமிம் இக்பால் 52 ஓட்டங்களையும் இம்ருல் கைஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். களத்தில் மொமினுல் ஹக் 175 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹீம் 92 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆடி வருகின்றனர்.  இன்னும் 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் பங்களாதேஷ் அணி அதிக ஓட்டங்களைக் குவிக்கும் பட்சத்தில் இலங்கை அணிக்கு அது பாதகமான சூழலை ஏற்படுத்தும். இன்றைய நாளை பொறுத்திருந்து பார்ப்போம். #சிகரம் …