Posts

Showing posts from November, 2017

83 மொழிகளில் 945 கவிதைகள் - AMBEDO

Image
"My poems published in the Amravati Poetic Prism anthology. This is the first time my Hindi and Tamizh poems are published anywhere. Thanks to appa for editing the Tamizh one. The anthology has entered the Limca Book Of Records for being the only anthology which carried 945 poems in 83 different languages"


உன் கனல்
ஏதோ ஒரு கனல் உனக்கென்று  அறியா நகரில் எரிகிறது! எரியும் கனலின் இருப்பறியாதுளம்  தேர்ந்த இருளில் தொலைகிறது...
தேடல் இன்றி அக்கனல் உன்னை  நாடி வருவதும் இயலாது  இருளில் இயங்கிப் பழகிய கால்கள்  கனல் வழி இயங்கப் பயிலாது 
புறத்தில் எரியும் அறியாக் கனலை  அகத்தின் ஒளியால் எட்டி விடு, வரமாய் எஞ்சிய செம் பொறிகளைப்  புது யுகத்தின் வித்தாய் இட்டு விடு.



83 மொழிகளில் 945 கவிதைகள் - AMBEDO

சரண்யா பிரான்சிஸ் - SARANYA FRANCIS
பெங்களூர், கர்நாடகா, இந்தியா.
saranya.francisp@gmail.com

முத்தான கவிதைகள் மூன்று..

Image
நமது 'சிகரம்' வாசகர்களுக்காக இணையவெளியில் நாம் கண்டெடுத்த முத்தான மூன்று கவிதைகளை இணைப்புகளுடன் பகிர்ந்துள்ளோம். உங்கள் எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

பதிவர் : சேவியர்
தளம் : கவிதைச் சாலை
கவிதை : ஐந்தாம் வகுப்பு நண்பன்

ஆரம்பப் பள்ளியில்
என்னோடு கூடவே இருந்தான்
பட்டன் அறுந்து போன
சட்டையோடு
ஒரு நண்பன்..
பதிவர் : உழவன்
தளம் : உழவனின் நெற்குவியல்
கவிதை : நின்று போன உதிரம்

அவளை லிங்கம்மா என்றுதான்
அழைப்போம்.
சிறிது மனநலம் குன்றியவள்
அதனால்தான் எல்லோருக்கும்
அவள் ஆகிப்போனாள்...


பதிவர் : பசுபதி
தளம் : பசுபதிவுகள்
கவிதை : பகைவன்

பிள்ளைப் பிராயத்திலே --என்மனப்
. . பீடத்தி லேறிவிட்டான்.
பள்ளிப் படிப்பினிலே -- கோணல்
. . பாதையைக் காட்டிவிட்டான்...
-சிகரம்

வாழ்க்கை வாழ்வதற்கே!

Image
வாழ்க்கை வாழ்வதற்கே! ஆம், வாழ்வதற்குத்தான் வாழ்க்கை. ஆனால் நாம் வாழ்க்கையை வாழ்கிறோமா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். நான் தினமும் காலையில் எழுகிறேன்; வேலைக்குச் செல்கிறேன்; இரவு நன்றாக உறங்குகிறேன், ஆகவே நான் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு தானே இருக்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதுவெல்லாம் வாழ்க்கை அல்ல. உங்களுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் நீங்கள் கட்டுப்படுத்த முடிந்தால் அது தான் வாழ்க்கை. காலை எட்டு மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பது விதி. அதற்காக தயாராவதோ, பணிக்குச் செல்வதோ வாழ்க்கை அல்ல. அது இன்னொருவர் உங்கள் நிமிடத்தை தீர்மானிக்கிறார். உங்களுக்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்க விரும்பினாலும் உங்களால் முடியாது. தினமும் வேலைக்குச் சமூகமளிக்க வேண்டும் என்பது விதி. இந்த விதியை மாற்ற முடியாதா? முடியும்!




இதுவெல்லாம் வாழ்க்கை இல்லை என்றால் என்னுடைய வாழ்க்கையை வாழ்வதுதான் எப்படி? இப்படித்தான். உங்களுக்கு எது விருப்பமோ அதைப் படியுங்கள், உங்களுக்கு எந்த வேலை பிடித்திருக்கிறதோ அந்த வேலையையே செய்யுங்கள். இப்படியாக ஒவ்வொரு நிமிடத்தையும் உங்களுடையதாக்குங்கள். இதற்கு முறையான திட்டமிட…

எமோஜி - Emoji

Image
'எமோஜி  - Emoji' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச்சொல்லாக்கத்தை உருவாக்கும் முயற்சியில் 'தமிழ் கூறும் நல்லுலகம்' வாட்ஸப் குழுவில் கிடைத்த சில பதில்கள் இங்கே பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.


உணர்ச்சிக்குறியீடு 
குறுநகையி 
உணரோவி 
உணர்வி 
ஓவி 
உணர்வோவியம் 
உணர்யீடு 
உணர்விகள் 
உணர்குறி 
உணர்வடை 
உணரி 
உணர்த்திகள் 
உணரோவியம் 
உணர்வோவி 
படக்குறி 
உணர்நகை 
உணர்மொழி 
குறியோவி 
உணர்விப்பான் 
உணர்மொழி 
குறிமொழி 
குறிச்சிரிகள் 
குமொழி 
சிறுகுறி 
குறிநகை 
பொம்மி
உணர்சுட்டிகள்  
கொலுமி 
சுட்டோவி 
உணர்வோடிகள் 
உணரொட்டி 
உணர்வெழுத்து 
உணறி 
விழிமொழி 
முகக்குறி 
முகமொழி
குறுமொழி 
முகமி 
உணர்மிகள் 
முகவடி 
படமொழி 
நினைகுறி 
மனக்குறி 
பாவனைக்குறி 
'எல்லோருக்கும் புரியுற பாஷை ஒண்ணு இருக்கு... எமோஜி!' என்னும் தலைப்பில் விகடன் வழங்கிய கட்டுரை உங்களுக்காக இங்கே : 
//  'எல்லோருக்கும் புரியுற பாஷை ஒண்ணு இருக்கு... எமோஜி!

லக்ஷ்மி குறும்படம் | LAKSHMI SHORT FILM

Image

ஹார்வார்டு தமிழ் இருக்கையின் பின்னணியும் உள்ளரசியலும் !

Image
Rajam Amma's (US Tamil Scholar, California) message in tamil groups about Harward Tamil Chair. :

ஹார்வர்டில் தமிழ் இருக்கை பற்றிய என் கருத்தைப் பலரும் அறிவர். இங்கேயுள்ள சில உள்ளரசியலையும் இப்போது சொல்கிறேன். [நான் சொல்லாவிட்டால் வேறு யார் சொல்லப்போகிறார்?]

++++++++++

பின்னணி
------------
முதலில் அதாவது இரண்டு ஆண்டுகளுக்குமுன் (2015-இல், ஃபெட்னாவில் இரண்டாம் முறையாக எனக்குச் சிறப்புச்செய்த ஆண்டு) ஃபெட்னா தொடர்பாக என்னுடன் உரையாடியவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்று உறவாடிய சிலரும் என்னை ஹார்வர்ட் இருக்கைக்குழுவின் உள் ஆளாக வைத்துக்கொண்டது போலப் பேசி, "உங்கள் வழிநடத்தலின்படிதான் ஹார்வர்ட் தமிழிருக்கை அமைப்பதற்கான எல்லாம் நடக்கும்" என்று ‘ஆசை காட்டி’னார்கள்! ஹார்வர்ட் மேலிடத்திலிருந்தும் “we’ll follow your lead” என்று மின்மடல் வந்தது! நம்பிவிட்டேன்... நம்பிவிட்டேன்... நம்பித் தொலைந்தேபோனேன்! 'அதுக்கென்ன, எனக்கு வயதானாலும் சில ஆண்டுகள் அங்கே தங்கியிருந்து இளையதலைமுறையினரைப் பயிற்றுவிப்பேன், என்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்கிறேன்' என்று மிகவும் ஆவலுடனும் ஊக்கத்துடனும் …

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரே பார்வையில்!

Image
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று (2017.11.09) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சுதந்திர இலங்கையின் 71 ஆவது வரவு- செலவுத் திட்டமும் நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு - செலவுத்திட்டமுமாக அமைந்த வரவு-செலவுத்திட்டத்தின் விபரம் வருமாறு:
வரவு - செலவுத் திட்ட சமர்ப்பிப்பில் பங்குகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியினர் சைக்கிளில் பாராளுமன்றிற்கு வருகை தந்தனர். நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றிற்கு வருகை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை கூடியது

2018 ஆண்டுக்கான தேசிய வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதில் பெருமையடைகின்றேன்: நிதியமைச்சர் மங்கள சமரவீர
அரச வருமானம் 20 வீதத்தால் அதிகரிக்க எதிர்பார்ப்பு பொருளாதாரம் 20 வீதத்தால் அதிகரிக்கப்படும்   அரசாங்கம் என்ற ரீதியில் பொருளாதாரத்தில் தீர்க்கமானதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. நீண்ட அபிவிருத்தித் திட்டம் அவசியம் : வணிக ரீதியில் ஸ்திரத்தன்மையை தக்கவைக்துக்கொள்ள போராட வேண்டியுள்ளது. இந்த வரவு - செலவு திட்டத்தின் மூலம் ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதே…

தற்கொலை குறிப்புகள் | கார்ட்டூனிஸ்ட் பாலா | LINES MEDIA.IN

Image
சில விசயங்கள் அவ்வளவு எளிதில் மனதை விட்டு அகன்றுவிடாது... அதேபோல் சில விசயங்கள் ஏன் நடக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியாது.

கந்து வட்டி கொடுமைக்கு அப்பா அம்மாவுடன் நின்று எரிந்த அந்த குழந்தையின் உருவம் இன்னும் மனதை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.

அந்த குழந்தையின் மரணத்தையொட்டி எழுத நினைத்த இந்த பதிவு தற்கொலைகள் குறித்தானதுதான் என்றாலும் நான் நெருக்கமாக பார்த்த முதல் மரணத்திலிருந்து இதை தொடங்க விரும்புகிறேன். இதய பலகீனமானவர்கள் இதை படிக்காமல் கடந்து சென்றுவிடுமாறு வேண்டுகிறேன்.

அப்போது எனக்கு 8 வயது இருக்கும். மும்பையில் நாங்கள் குடியிருந்த வீட்டருகே ஒரு பாழடைந்த வீடு ஒன்று இருந்தது. அக்கம் பக்கத்து குழந்தைகள் எல்லாம் அங்கு விளையாடுவது வழக்கம். அன்றும் அப்படிதான் விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென குழந்தைகள் எல்லோரும் பேரூந்து விளையாடுவது என்று முடிவு செய்தோம். நான் நடத்துனராக மாறினேன். மற்ற குழந்தைகள் பயணிகளாகி ஒருவர் பின் ஒருவர் வரிசையாக நின்று கொண்டார்கள். “நான் தான் டிரைவர்” என்று கூவியபடி கடைசியாகத்தான் அவன் ஓடி வந்தான்.

ராஜா என்பது அவன் பெயர். அந்த குழந்தைகள் பட்டாளத்தி…

தமிழ் பிக்பாஸிடம் சில கேள்விகள்...

Image
நமது மாண்புமிகு பிக்பாஸ் போட்டியாளரான கஞ்சா கருப்புஅண்ணன் அவர்கள் பிக்பாஸை நோக்கி 'ஐயா... நாமினேசன்னா என்னங்கய்யா....?' என்று கேட்டது போல நாமும் நமது பிக்பாஸ் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம். அந்தக் கேள்விகள் இதோ....
01. பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாள் நடக்கும்னு தானே சொன்னீங்க? பின்ன ஏன் 98 நாள்லயே முடிச்சீங்க? 

02. ஆரவ்வின் மருத்துவ முத்தம் பற்றி நீங்கள் அறிந்த போதே இருவரையும் அழைத்து கண்டித்திருந்தால் ஓவியா தண்ணீரில் விழ வேண்டியிருந்திருக்காது அல்லவா?



03. நீங்கள் வைத்த போட்டிகளில் பல பிரச்சினைகள் உருவாக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் காணப்பட்டதன் பின்னணி என்ன? 

04. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தபோதும் கூட நீங்கள் மௌனமாகவே இருந்தது ஏன்?

05. நீங்கள் 'சிலருக்கு மட்டும்' பக்கச் சார்பாக நடந்துகொண்டது ஏன்? 

06. மக்கள் அளித்த வாக்குகள் நேர்மையாக எண்ணப்பட்டனவா?

07. பிக்பாஸ் வீட்டினுள்ளே எத்தனையோ நல்ல விடயங்கள் நடந்திருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் தொகுக்காமல் மக்களை தூண்டிவிடும் விதமாக காட்சிகளைக்…

நான் யார் | தமிழறிஞர் மா. நன்னன்

Image
என்னை நாத்திகன் என்கின்றனர் சிலர். நான் ஆத்திகனாக இருக்க விரும்பாமல் நாத்திகனாக இல்லை. ஆத்திகனாக இருக்க முடியாமையால்தான் நாத்திகனாக இருக்கிறேன்.
நான் கடவுள் இல்லை என்று சொல்வதாக கூறுகின்றனர். அப்படி சொல்வது சரியில்லை. கடவுள் இல்லையே என்று கவலைப்படுபவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். கடவுள் இருக்க வேண்டும். இருந்தால் நல்லது என்பவன். முடிந்தால் அப்படி ஒன்றை உண்டாக்கி இயங்க செய்யலாம் என கருதுபவன்.


என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர். உண்மை அதன்று. நம்பிக்கை வைக்கத்தக்கதாக அப்படி எதுவும் இருப்பதாக புலப்பட காணோமே என ஏங்குபவன்தான் நான்.

கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிடாதீர்கள். அதனை நாடியும் தேடியும் அலைந்து அலுத்து களைத்து ஒய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாமென்றோ அது இருக்க கூடாதென்றோ கூறவில்லை.!

என்னை பிராமணதுவேசி பார்ப்பனர்களை திட்டுகிறவன் என்கிறீர்களே நான் அவர்களை தேவடியாள் மக்கள் புலையர் சண்டாளர் என்று திட்டுகிறேனா? இல்லையே! எங்களை மற்றவர்கள் இழிவுபடுத்தாதீர்கள் என்று தான் சொல்கிறேன். மற்றவர்களை சூத்திரர் புல…

''தொடர்ந்து கார்ட்டூன் வரைவேன்''- பிணையில் வந்த கார்டூனிஸ்ட் பாலா

Image
அவதூறாக சித்திரம் வரைந்ததாக கார்டூனிஸ்ட் பாலாவுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில், இன்று (06.11.2017) கார்டூனிஸ்ட் பாலா திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

லைன்ஸ் மீடியா என்ற பெயரில் இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளத்தில் கேலிச்சித்திரம் வரைந்து வந்த பாலா, திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த எசக்கிமுத்துவின் குழந்தை நெருப்புடன் தரையில் கிடப்பது போலவும், தமிழக முதல்வர், நெல்லை காவல்துறை ஆணையர் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வேடிக்கை பார்ப்பதுபோல கேலிச்சித்திரம் வரைந்தார்.


இந்த சித்திரம் அவதூறு செய்வதுபோல இருப்பதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடுத்த புகாரைத் தொடர்ந்து பாலா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார்.

நீதிமன்றத்திற்கு அழைத்துவந்த சமயத்தில் ஊடகத்தினரிடம் பாலா பேசும்போது தொடர்ந்து கேலிச்சித்திரங்கள் வரையப்போவதாக கூறினார்.

''அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்த நான் தொடர்ந்து கார்ட்டூன் வரைவேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. இன்னும் அதிகமான எண்ணிக்கையில் சித்திரங்கள…

கே.எஸ்.ஆர்.மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் மூன்றாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு படைப்புகளைக் கோரல்

Image
தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும் என்பார் பாவேந்தர் பாரதிதாசன். அவரது எண்ணங்களின் செயல்வடிவமாக எமது கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து பன்னாட்டு அளவில் கருத்தரங்கம் நடத்திவருகிறோம்.


முதலாம் ஆண்டு “ தமிழ் ஆங்கில எழுத்தாளர் பார்வையில் இயற்கை”, இரண்டாம் ஆண்டு “ திருக்குறள் மொழி பெயர்ப்புகளும், உரைநயங்களும்” என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தியுள்ளோம். இக்கருத்தரங்கில் சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து சிறப்புப் பரிசுகளும் வழங்கிவருகிறோம். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு,12.12.2017 அன்று நடைபெறவுள்ள மூன்றாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு கட்டுரை வழங்க அன்புடன் அழைக்கிறேன்..
கருத்தரங்கத்துக்கான தலைப்பு –
தமிழ் ஆங்கில இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள் (தமிழ் = தமிழ், ஆங்கிலம் = ஆங்கிலம், தமிழ் = ஆங்கிலம்)


தமிழ் இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங்களையும், ஆங்கில இலக்கியங்களுடன் ஆங்கில இலக்கியங்களையும், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களுடனும் ஒப்பீட்டு முறையில் கட்டுரைகள் அமையலாம்.
கட்…

சந்தனப்பேழைகள் - குறும்படம்

Image
எனது குறும் படத்தின் முதற்பார்வை (1st look poster) பிடித்திருந்தால் பகிர்ந்து கொண்டு ஆதரவை தாருங்கள்.
கே.எஸ்.எஸ்.ராஜ் இயக்கத்திலும் பார்வதி பரஞ்சோதி அம்மன் கிரியேஷன் (புதுக்கோட்டை இந்தியா) மற்றும் கூத்துப்பட்டறையின் தயாரிப்பிலும், குணால்,தனு,பிரதீபா,பவில்,கபில், ஆகியோரின் நடிப்பிலும் கலைமாறன் மற்றும் ப்ரியனின் ஒளிப்பதிவிலும், குணாலி்ன் படத்தொகுப்பிலும் இந்த படைப்பு உருவாகியிருக்கின்றது.
தமிழ்,மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் இந்த குறும்படம் வெளியிடப்பட இருக்கின்றது. நேரடியாக ஆங்கிலத்தில் குறும்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட இருப்பது மகிழ்ச்சி. இந்த போஸ்டர் தமிழில் வெளிவரும் குறும்படத்திற்கானது. ஆங்கிலத்திற்கான போஸ்டர் அடுத்ததாக வெளியிடப்படும். அத்தோடு இரண்டு மொழிகளிலும் இந்த மாதம் ட்ரெயிலர் (முன்னோட்டம்) வெளியிடப்படும். வெளியீட்டுக்கான திகதி இம்மாத இறுதியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்
அன்புடன்
உங்கள் ஆதரவை வேண்டி
கே.எஸ்.எஸ்.ராஜ்

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் - 379ஆவது மாத கவியரங்கம்

Image

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம்-01 (புதுவெள்ளம்) மேடை நாடகம் - முழு அத்தியாயம்.

Image
சிகாகோ தமிழ்ச் சங்கம் வழங்கிய அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம்-01 (புதுவெள்ளம்) மேடை நாடகம் - முழு அத்தியாயம்.
மேடையேற்றம் செய்யப்பட்ட நாள் : 04/05/2013


Full length video of Ponniyin Selvan drama staged in Chicago on May 4th, 2013!

Ponniyin Selvan Drama Part 1 - புது வெள்ளம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்

Image
சிகாகோ தமிழ்ச் சங்கம் 1969 -ல் இருந்து சிகாகோ பெருநகரில் வாழும் தமிழ் மக்களுக்குத் தங்கள் பாரம்பரியம், மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பேணிக் காக்கும் ஒரு தளமாகவும், இன்றைய மற்றும் அடுத்தத் தலைமுறையினர் தங்கள் கலை, பண்பாடு, இலக்கியம், இயல், இசை, நாடகம் போன்ற அறிவுச்சார் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு அமைப்பாகவும், இங்கும் இந்தியாவிலும் தொண்டார்வம் உள்ள மக்களுடனும், சகத் தொண்டு நிறுவனங்களுடனும் சேர்ந்து உதவிக் கரம் நீட்டிச் சமூக சேவை செய்யும் ஒரு அமைப்பாகவும் செயல் பட்டு வருகிறது.


ஆண்டுதோறும் பொங்கல் விழா, முத்தமிழ் விழா, குழந்தைகள் தின விழா மற்றும் விளையாட்டு தின விழா என்று பொழுதுபோக்கும், விழிப்புணர்வும் ஊட்டும் பல்வேறு, பற்சுவை நிகழ்ச்சிகளை வழங்குகிறது. நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல், நடனம், நாடகம், மேடைப் பேச்சு, கவிதை, விவாத மேடை, பட்டிமன்றம், பலகுரல் விகடம், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்று அனைவரும் ரசிக்கும் வகையில் நடத்தி வருகிறது. Contact Us Chicago Tamil Sangam
PO Box 9606, Naperville, IL 60567 secretary@chicagotamilsangam.org இணையத்தளம் : சிகாகோ…

கந்துவட்டி தற்கொலை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த பாலா கைது - BBC TAMIL

Image
திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கந்துவட்டி கொடுமையால், குழந்தைகளுடன் ஒரு இளம் தம்பதி தீக்குளித்த சம்பவத்தை கண்டித்து கேலிச்சித்திரம் வரைந்த சென்னையைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் பாலா இன்று (ஞாயிற்றுக்கிழமை 05-11-2017) கைது செய்யப்பட்டுள்ளார்.  மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் மற்றும் முதல்வரின் படங்களை கொண்ட அந்த கேலி சித்திரம் தம்மை அவதூறு செய்வது போல உள்ளதாக திருநெல்வேலி ஆட்சியர் சந்தீப்நந்தூரி அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. லைன்ஸ் மீடியா என்ற பெயரில் இணையதளம் நடத்தி வருகிறார் பாலா. கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் தீயிட்டு கொளுத்திக் கொண்டதைக் கண்டித்து கட்டுரை மற்றும் கேலிச்சித்திரத்தை அந்த தளத்தில் பதிவிட்டிருந்தார்.  கார்டூனிஸ்ட் பாலா வரைந்த சித்திரம் அவதூறு செய்வது போல அமைந்தாக கூறி மாவட்ட ஆட்சியர் நந்தூரி அளித்த புகார் கொடுத்ததை அடுத்து, பாலாவை கைது செய்துள்ளதாக திருநெல்வேலி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு …

தமிழக வரலாற்றின் அவமானகரமான நாள்! - Lines Media

Image
கொடூரமான இந்த நீண்ட இரவை எப்படி கடக்கப்போகிறேன் என்று தெரியவில்லை.. அந்த குழந்தையின் மீது பற்றி எரிந்த நெருப்பு என் மீதும் என் குழந்தைகளின் மீதும் பற்றி எரிந்ததைப்போல்மனம் எரிகிறது..


தமிழக வரலாற்றில் அவமானகரமான நாள் இன்று. தீ குளித்த நால்வரில் மனைவி குழந்தைகள் மூவரும் இறந்துவிட்டார்கள். இப்படி ஒரு கொடூர கொலைக்கு காரணம் கந்துவட்டி கும்பலைவிட நியாயம் கிடைக்கும் என்று நம்பி வந்து ஒவ்வொரு கதவாக தட்டியவர்களை கைவிட்ட நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளும் காவல்துறையினரும்தான் முதல் குற்றவாளிகள். ஏற்கனவே 98 குழந்தைகளை நெருப்புக்கு தின்னக்கொடுத்துவிட்டு குற்றவாளிகளை தப்ப விட்ட இந்த ஆட்சியாளர்கள் இப்போது மட்டும் யோக்கியமாக நடந்து கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை.. ஆனால்.. போலீசோ கலெக்டர் அலுவலக அதிகாரிகளோ.. கந்து வட்டி கும்பலோ.. இரண்டு குழந்தைகளின் தகப்பனாக வயிறெரிந்து சொல்கிறேன்.. இந்த குழந்தைகளின் உடலில் பற்றிய நெருப்பு தலைமுறையாக உங்களை விடாது.. மனசும் உடம்பும் எரியுது பாவிகளே…